புதுவையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கும் பரபரப்பான காட்சி

புதுச்சேரியில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

First Published Jun 20, 2023, 4:29 PM IST | Last Updated Jun 20, 2023, 4:29 PM IST

புதுச்சேரியில் இன்று தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த ஆட்டோ ஒன்று எதிரே வந்த தனியார் பேருந்து மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட 7 மாணவிகள் காயமடைந்தனர்.

அதில் 2 மாணவிகள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை மாநில முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் ஆட்டோவும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories