சந்திர பிரியங்காவை மீண்டும் அமைச்சராக்குங்கள்; போராட்டத்தில் குதித்த மகளிர் அமைப்பினரால் பரபரப்பு

சந்திர பிரியங்காவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கக்கோரி புதுவையில் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.

First Published Oct 13, 2023, 9:00 AM IST | Last Updated Oct 13, 2023, 9:00 AM IST

புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் சந்திரபிரியங்கா. இவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது அமைச்சர் பதவியை கடந்த 10ம் தேதி ராஜினாமா செய்தார். இதன் பிறகு பல்வேறு அரசியல் கட்சிகள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றன. இந்நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மீண்டும் சந்திர பிரிங்காவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி  வழங்கிட வலியுறுத்தி நெடுங்காடு  கோட்டுச்சேரி மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டுச்சேரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சந்திர பிரியங்காவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் .

Video Top Stories