"யார் மூக்கு நீளமாக இருக்கிறதோ அவர்கள் மூக்கு தான் அறுபடும் " கமல் அதிரடி பேட்டி..!
அலட்சியம் அதிகமாக அதிகமாக கொலைகள் அதிகரித்து வருகிறது என்ற கமல், சட்டத்தை முறைப்படி செயல்படுத்தவில்லை எனவும், சட்டம் திட்டம் முறையாக இல்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் செய்தியாளர்களை சந்தித்த பேசும் போது "ஜார்கண்ட்,மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து பழங்குடி மாணவர்கள் என்னை சந்திக்க விரும்பினார்கள் சந்தித்தேன், அவர்களுடன் மெட்ரோ பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என்று கூறினார்.
அதைப்போல் அலட்சியம் அதிகமாக அதிகமாக கொலைகள் அதிகரித்து வருகிறது என்ற கமல், சட்டத்தை முறைப்படி செயல்படுத்தவில்லை எனவும், சட்டம் திட்டம் முறையாக இல்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
நடிகர்களும் பேனர் வைக்கிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு பதில் அளித்த கமல், என் பேனர்களையும் வைத்திருக்கிறார்கள், ஆனால் எங்கு பேனர் வைக்க வேண்டும் என்பதை பார்த்து தான் வைக்கவேண்டும் எனக் கூறினார். எனவே தவறு செய்பவர்கள் யாரோ, யார் மூக்கு நீளமாக இருக்கிறதோ அவர்கள் மூக்கு தான் அறுபடும் என்றார்.
நடிகர் விஜய் கூறியது மறைமுகமாக அல்ல, நேரடியாகவே பேசி உள்ளார் எனக் கூறிய அவர், விஜய் கூறிய கருத்து பாராட்டத்தக்கது என்று கூறினார்