சீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..! பரபரப்பு வீடியோ
தமிழ்நாடு: சீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு தெரிவித்து சென்னை கிராண்ட் சோழா ஹோட்டல் முன்பு போராட்டம் நடத்திய 3 பெண்கள் உட்பட 5 திபெத்தியர்கள் கைது.
பிரதமர் மோடி, பிரசாரத்துக்கு வந்தாலும், வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கிவைக்க வந்தாலும், வெளிநாட்டுத் தலைவர்களுடன் விழாவை சிறப்பிக்க வந்தாலும் #GoBackModi மற்றும் #TNWelcomesModi என்கிற இரு துருவ ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. சில நேரங்களில் #GoBackModi என்கிற ஹாஷ்டேக், உலக அளவில் டிரெண்டாகும்.
தற்போது இந்த இரு ஹாஷ்டேக்களும் இந்திய அளவில் டாப் டிரெண்டிங்கில் உள்ளன. இந்நிலையில் #TN_welcomes_XiJinping என ஸி ஜின் பிங்கை வரவேற்கும் ஹேஸ்டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், ரோஜா பூ கொடுத்தும் பிரதமர் மோடியயை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து சீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு தெரிவித்து சென்னை கிராண்ட் சோழா ஹோட்டல் முன்பு போராட்டம் நடத்திய 3 பெண்கள் உட்பட 5 திபெத்தியர்கள் கைது செய்தனர் காவல் துறை இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.