விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..! வீடியோ

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் உள்பட 17 மாநிலங்களில் உள்ள 49 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று கொண்டு இருக்கின்றனர்

First Published Oct 21, 2019, 3:14 PM IST | Last Updated Oct 21, 2019, 3:14 PM IST

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் உள்பட 17 மாநிலங்களில் உள்ள 49 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று கொண்டு இருக்கின்றனர் 
சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் நடந்து வரும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் 1 மணி நேர நிலவரப்படி விக்கிரவாண்டியில் 54.17% வாக்குபதிவுகளும் நாங்குநேரில் 41.35% வாக்குபதிவுகளும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஒருசில இடங்களில் மழைக் காரணமாக இணையதளச்சேவை பாதிப்பினால் தகவல்கள் தாமதமாக வந்துள்ளதாகவும் மற்றும் தேர்தல் எந்தவித பிரச்சனைகள் இல்லாமல் மிகவும் அமைதியாகவும் நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விக்கிரவாண்டியில் 275 சிசிடிவி கேமராக்களும் நாங்குநேரியில் 295 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குபதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி 6 மணிக்குள் வாக்குபதிவு நிறைவடையும் என்றும் வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டும் வாக்குகளை பதிவுச் செய்வதற்கு அனுமதிச்சீட்டுக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.