இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜயராஜ்.. விஜயகாந்த் ஆக மாறிய கதை..! வீடியோ
புரட்சிக் கலைஞர்’ என்றும் , ‘கேப்டன்’ என்றும் அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆன கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஏசியாநெட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்..
1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.