Shanmuga Pandian: பிரச்சாரத்தின் போது வந்த கேப்டனின் நினைவு.. பேசும்போதே தேம்பி தேம்பி அழுத ஷண்முகப் பாண்டியன்

விருதுநகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது நடிகர் விஜயகாந்தின் மகன் ஷண்முகப்பாண்டியன் திடீரென அழுததால் அவரை தொண்டர்கள் தேற்றினர்.

First Published Apr 17, 2024, 12:54 PM IST | Last Updated Apr 17, 2024, 12:54 PM IST

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் மாநிலம் முழுவம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் விஜய பிரபாகரனுக்கு வாக்கு கேட்டு அவருடைய தம்பியும், விஜயகாந்தின் இளைய மகனுமான ஷண்முகப் பாண்டியன் விருதுநகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசும் போது திடீரென தன் தந்தையின் நினைவு வந்ததால், கண்கலங்கிய ஷண்முகப் பாண்டியன், அப்பா இல்லாம என்ன பண்ண போறோம்னு தெரியல என பேசி தேம்பி தேம்பி அழுதார். இதையடுத்து அங்கு கூடி இருந்த தொண்டர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். 

Video Top Stories