அரைநிர்வாணமாக போராட்டம் நடத்திய திமுக முன்னாள் மேயர்..! கொரோனா சமையத்தில் கூடிய கூட்டம் வீடியோ..

அரைநிர்வாணமாக போராட்டம் நடத்திய திமுக முன்னாள் மேயர்..! கொரோனா சமையத்தில் கூடிய கூட்டம் வீடியோ..

First Published Mar 21, 2020, 11:46 AM IST | Last Updated Mar 21, 2020, 11:46 AM IST

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக, திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட் இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக மார்க்கெட் வியாபாரிகளுக்கு தற்காலிக இடம் காட்டன் மார்க்கெட் பகுதியில் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மார்க்கெட் வியாபாரிகள் தற்காலிக இடத்துக்கு செல்லாமல் பழைய இடத்திலேயே காய்கறி மார்க்கெட் செயல்பட வேண்டும் என கோரினர். மேலும் காய்கறி மார்க்கெட் இடிக்க விடாமல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்த நிலையில், இன்று காலை திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர்கள் கண்ணன், சுப்பிரமணி தலைமையில் காய்கறி மார்க்கெட் இடிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுடன்  வந்தனர்.

அவர்களை தடுத்து திமுக முன்னாள் மேயர் செல்வராஜ் தலைமையில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 100 க்கும் மேற்பட்டோர் அரை நிர்வாண தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் காய்கறி மார்க்கெட் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாண தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.