சென்னையில் பாஜகவுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம்... திருமாவளவன் பங்கேற்று கண்டன முழக்கம்!!

பாஜகவுக்கு எதிராக சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துக்கொண்டு பாஜகவுக்கு எதிராகவும், சனாதன சக்திகளுக்கு எதிராகவும் கண்டன முழங்கங்களை எழுப்பினார்.

First Published Feb 28, 2023, 6:56 PM IST | Last Updated Feb 28, 2023, 6:56 PM IST

பாஜகவுக்கு எதிராக சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துக்கொண்டு பாஜகவுக்கு எதிராகவும், சனாதன சக்திகளுக்கு எதிராகவும் கண்டன முழங்கங்களை எழுப்பினார். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் இன்று விசிக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னையில், இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றது மட்டுமல்லாமல் கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்திற்கு தங்களது முழு ஆதரவையும் அளித்தனர்.