திமுக பிரமுகர் மிரட்டி செய்யச் சொல்வதாக கதறி கதறி அழும் பெண்..! பரபரப்பு வீடியோ..
திருப்பூரில் திமுக மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்..
திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக பெண் வீடியோ ஒன்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
திருப்பூரை சேர்ந்தவர் கார்த்திக் குமார் இவரது மனைவி ஜெஸில்லா இருவருக்கும் சொந்தமாக மூன்று தளங்கள் கொண்ட வீடு உள்ளது. இவர் மருத்துவ செலவிற்காக வீட்டு பத்திரம் வைத்து திமுகவை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் கடன் வாங்கியுள்ளார். கோபிநாத் மற்றும் கூட்டாளிகள் வங்கி கணக்கில் பணம் அனுப்பியுள்ளனர். பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்தியும் பல்வேறு வகையில் தொந்தரவு செய்ததாக தம்பதியர் வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து ஜெஸில்லா கூறுகையில் வங்கி கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும் மற்றும் ஒப்பந்த பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் மீண்டும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். வேறு பகுதிக்கு சென்று வாழ்ந்தாலும் திமுகவை சேர்ந்த கோபிநாத் தொந்தரவு செய்கிறார் ஏற்கனவே கமிஷனரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே நாங்கள் நிம்மதியா வாழ பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.