Asianet News TamilAsianet News Tamil

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேலூர் தேர்தல் வாக்குப்பதிவு..! வீடியோ

பணப் பட்டுவாடா புகாரின் பேரில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலின்போது பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள்.
வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு போடுவதற்காக 1553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

ஒன்பதாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories