சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்.. திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி..!
விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ கடந்த செப்டம்பர் 12 குரோம்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பல்லாவரம் - துரைபாக்கம் ரேடியல் சாலையில் இரு சக்கர வானகத்தில் சுபஸ்ரீ சென்றார். மதியம் 2.50 மணி அளவில் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையைத் தாண்டி வந்தபோது, சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது.
இதில் நிலைத்தடுமாறிய சுபஸ்ரீ, இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்தார். அப்போது அவர் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சுபஸ்ரீ பலியானார்.இதனை தொடர்ந்து உயிரிழந்த சுபஸ்ரீக்கு பலரும் ஆழந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார் அதன் பின்னர் திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.