தொழுகைக்காக பேச்சை நிப்பாட்டிய ராகுல்: நெகிழ்ச்சியுடன் பார்த்த இஸ்லாமியர்கள்
தனது மேடை பேச்சின் போது இஸ்லாமியர்களின் தொழுகைக்காக தனது உரையை ராகுல் காந்தி பாதியில் நிறுத்தியதை பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று கூடலூர் பகுதியில் மேடையில் உரையாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அருகில் இருந்த மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தொடங்கினர். தொழுகை தொடங்கியதும் தனது உரையை பாதியில் நிறுத்திய ராகுல் தொழுகை நிறைவு பெற்றதும் மீண்டும் உரையாற்றினார். ராகுலின் இச்செயலை அங்கு கூடியிருந்த இஸ்லாமியர்கள், கட்சி உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.