பொதுச்செயலாளர் இல்ல கொடநாடு ஹீரோன்னு போட்டுக்கோ; கொளுத்திப்போடும் புகழேந்தி!!

அதிமுக பொதுச்செயலாளர் அல்ல கொடநாடு ஹீரோ என போட்டுக்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

First Published Jul 17, 2023, 12:25 PM IST | Last Updated Jul 17, 2023, 12:25 PM IST

2018 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் தனது இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்தபடி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்பது தற்போது வரை தொடர்வதாகவும், நிபந்தனையின் பேரில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பதவி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

எடப்பாடி பழனுசாமியின் இந்த நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணைய செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்தார். எனவே அதிமுக தனக்கு சொந்தம் கொடி எங்களுக்கே சொந்தம் என யாரும் கூறிக்கொள்ள முடியாது; அந்த அடிப்படையில், கோடநாடு கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி வரும் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் அதிமுக கொடியோடு பங்கேற்போம் என்று தெரிவித்தார். 

மேலும், ஈரோடு இடைத்ரேர்தலில் சீமானும், சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவையில் போட்டியிட்ட கமல்ஹாசனும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் பெருமளவில் வாக்குகள் பெற்றது பாராட்டுதலுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
 

Video Top Stories