முதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..! வீடியோ

இந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே 2-வது கட்டச் சந்திப்பு..

First Published Oct 11, 2019, 6:49 PM IST | Last Updated Oct 11, 2019, 6:49 PM IST

இந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நாடு திரும்பினார். 

இதன் தொடர்ச்சியாக சீன அதிபர் இந்தியா வந்து பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்தனர்.

இந்நிலையில்,பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் புறப்பட்டு பகல் 11.05 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.  
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து  சென்னை சென்னை வந்த பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், ரோஜா பூ கொடுத்தும் பிரதமர் மோடியயை வரவேற்றனர் இதற்கு இடையில் சீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு தெரிவித்து சென்னை கிராண்ட் சோழா ஹோட்டல் முன்பு போராட்டம் நடத்திய 3 பெண்கள் உட்பட 5 திபெத்தியர்கள் கைது செய்தனர் காவல் துறை இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

இதனை தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து இன்று காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.அதன் பிறகு விமான நிலைய பகுதியில் நடந்த கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சி கண்டு ரசித்தார்.பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.சி.டி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார் 4 மணி வரை அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு . தற்ப்போது மாமல்லபுரம் புறப்பட்டு செல்கிறார்

இந்த நிலையில் சீன அதிபரை வரவேற்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில் "அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே இந்தியாவிற்கு வருக வருக என வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன் ஆங்கிலம் மற்றும் சீன மொழியிலும் பிரதமர் வரவேற்றுள்ளார்.

அதேபோல் பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்திருப்பது தமிழர்களை பெருமையடைய வைத்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்ப்போது  நடைபெற உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் குறிப்பாக தொலைக்காட்சி நிருபர்கள் ஆயிரக்கணக்கில் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீன நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.

பொதுவாக வட இந்தியாவில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகளை தென்மாநில தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபடுவது உண்டு. ஆனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடக்கும் மிக மிக முக்கிய நிகழ்வுகளை மட்டுமே வட இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும். அதுகுறித்த நிகழ்ச்சிகளும் இடம் பெறும். ஆனால் இன்று சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்தித்துக்கொள்ளும் மாமல்லபுரம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

தமிழர்களின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என எத்தனையோ நிகழ்வுகளில் பேசி வருவதை பார்த்து இருப்போம். கோரிக்கையை முன் வைத்து இருப்போம்.. ஆனால் இன்று மாபெரும் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடமாக மாமல்லபுரம் விளங்குகிறது என்றால் இதற்கு எவ்வளவு பெரிய பின்னணி இருக்கும் என்பதை ஓரிரு வார்த்தையில் விளக்கிவிட முடியாது.