Asianet News TamilAsianet News Tamil

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயரே கிடையாது - கமல்ஹாசன்

ராஜராஜ சோழன் இருந்த காலகட்டத்தில் இந்து மதம் என்ற பெயரே கிடையாது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 

மன்னர் ராஜராஜ சோழனின் மதம் தொடர்பாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரபலங்கள் பலரும் மதம் குறித்த தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ராஜராஜ சோழன் வாழ்ந்த காலகட்டத்தில் இந்து மதம் என்ற ஒரு பெயரே கிடையாது. சைவம், வைணவம் என்று தான் இருந்தனர். இந்து மதம் என்பது வெள்ளையர்கள் நமக்கு வைத்த பெயர் என்று தெரிவித்துள்ளார்.

 

Video Top Stories