Asianet News TamilAsianet News Tamil

முதல் பேட்டியிலேயே இப்படியா..? பதறிப்போய் நழுவிய திமுக வேட்பாளர்..! வீடியோ

விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக வேட்பாளராக புகழேந்தி தேர்வு. பத்திரிக்கையாளர் சந்திப்பில் நழுவி சென்ற வீடியோ.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

திமுகவில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக இருக்கிற நா.புகழேந்தி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். நா.புகழேந்திக்கும் மாவட்ட துணைச்செயலாளர் ஜெயச்சந்திரனுக்கும் போட்டி நிலவியது. இந்நிலையில் இந்த போட்டியை அறிந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி இருவரையும் அழைத்து பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து ஜெயச்சந்திரனை சமாதானப்படுத்தியதை அடுத்து புகழேந்தி விக்கிரவாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் திமுக  ஏற்கெனவே 2016ல் இந்தத் தொகுதியில் போட்டியிட புகழேந்தி வாய்ப்புக் கேட்டார். 66 வயதான புகழேந்தி மூன்று முறை விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் ஏற்கெனவே திமுக உறுப்பினர் ராதாமணி வென்றிருந்தார். அவர் மறைந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்தார் அவருடன் வேட்பாளர் புகழேந்தி மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் வேட்பாளரை ஒரு சிலவார்த்தைகள் பேசுமாறு கோரிக்கை வைத்தனர் அதற்க்கு வேட்பாளர் புகழேந்தி கையைக்காட்டி போதும் போதும் என்றவாறு அங்கிருந்து வேகமாக நழுவி சென்றார்.

Video Top Stories