ஜக்கம்மா சொல்லுறா..! ஜக்கம்மா சொல்லுறா..! குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..!

குடுகுடுப்புக்காரன் வேடத்தில் வந்த திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன், 'ஜக்கம்மா சொல்லுறா உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க!' என்று மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

First Published Oct 11, 2019, 12:09 PM IST | Last Updated Oct 11, 2019, 1:18 PM IST

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் மற்றும் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி ஆகியோரை ஆதரித்து திமுகவினர் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடுகுடுப்புக்காரன் வேடத்தில் வந்த திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன், 'ஜக்கம்மா சொல்லுறா உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க!' என்று மக்களிடையே வாக்கு சேகரித்தார். மேலும் விலைவாசி குறையவும், நல்லாட்சி மலரவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் உதயசூரியனுக்கு ஜக்கம்மா ஓட்டு போட சொல்வதாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விநோத முறையில் இருந்த இந்த பிரச்சாரம் சிலரிடையே நகைப்பையும் ஏற்படுத்தியது.