சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இதை மாட்டார்கள் பாஜகவை பங்கம் செய்த - தயாநிதி மாறன்

சென்னை மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், நான் தற்போது இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவு (Emergency Exit Door) அருகே அமர்ந்துள்ளேன், சுய அறிவு உள்ளவர்கள் யாரும், தேவை இல்லாமல் இந்த கதவை திறக்க மாட்டார்கள் என்று வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

First Published Jan 21, 2023, 1:42 PM IST | Last Updated Jan 21, 2023, 1:42 PM IST

பாஜக உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா அண்மையில் தனது விமான பயணத்தின் போது, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அவசர கால கதவை (Emergency Exit Door) திறந்தது சர்ச்சையானது. இதனால், விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாகவும், இது தொடர்பாக சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நான் கோவைக்கு இன்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொள்கிறேன். எனக்கு அவசர கால கதவு அருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கதவை நான் திறக்க மாட்டேன். இதனால், அனைவரது பயண நேரமும் வீணாகும், சுய அறிவுள்ள யாரும் இதுபோன்ற செயலை செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Video Top Stories