மோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..! வீடியோ
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநில மீனவர் அணி சார்பாக சென்னையிலுள்ள காசிமேடு பகுதியில் நடுக்கடலில் படகில் கேக் வெட்டும் நிகழ்ச்சி மற்றும் தூய்மை இந்தியா நிகழ்ச்சியும் நடத்தினர்
மேலும் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன.
இதுகுறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சரான பியூஸ் கோயல் தனது டுவிட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர், தீர்க்கமானவர், மோடி நமக்கு மிகப்பெரிய முன்னோடி, நாம் அனைவரும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் , நமது பிரதமர், நாடுகளின் நட்புறவை பொறுத்தவரை இந்தியாவின் நிலையை கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் முக்கிய பங்காக இருக்கிறார். என கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பல பாஜக தலைவர்களிடமிருந்தும், கட்சி முழுவதிலுமிருந்து வந்தவர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் நள்ளிரவு முதல் கொட்டத் தொடங்கின
இதே போல் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உதுறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.