Video : செந்தில்பாலாஜியை சந்தித்துவிட்டு திரும்பிய அமைச்சர் உதயநிதி மற்றும் சேகர்பாபு!

கைது செய்யப்பட்டு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் சந்தித்து விட்டு வந்தனர்.
 

First Published Jun 14, 2023, 3:35 PM IST | Last Updated Jun 14, 2023, 3:35 PM IST

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, சென்னை கீரின்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். தலைமை செயலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதைதொடர்ந்து அவர் கைது செயப்பட்டார். அவர் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்ததையடுத்து, மருத்துவமனையில் அமைச்சர்கள் உதயநிதி, சுப்ரமணியன், வேலு, ரகுபதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வந்த சென்றனர்.

Video Top Stories