மனைவிக்கு 2 சாமி சேலையை தூக்கி கொடுத்தார் அமைச்சர்..! பரபர வீடியோ

இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு சமபந்தி மற்றும் பொது விருந்துக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழக முழுவதும் 448 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

First Published Aug 15, 2019, 6:43 PM IST | Last Updated Aug 15, 2019, 6:42 PM IST

இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு சமபந்தி மற்றும் பொது விருந்துக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழக முழுவதும் 448 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு திண்டுக்கல் சீனிவாசன் அம்மன் சிலைக்கு உடுத்தும் சேலை, வேட்டிகளை அங்கே வருகை தந்திருந்த பொதுமக்களுக்கு வழங்கி கொண்டிருந்தார் அப்போது தன குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு புடவைகளை எடுத்து வைத்தார் இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது அதைப்போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். கே.கே. நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இந்த சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராக்கி கட்டினார். முன்னதாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வடமாநிலப் பெண்கள் சென்றனர். அங்கு முதலமைச்சருக்கு ராக்கி கயிறு கட்டி இனிப்பு வழங்கினர். இதை அடுத்து பிரம்மகுமாரிகள் அமைப்பினர், முதலமைச்சரை சந்தித்து சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ராக்கி கயிறு கட்டி இனிப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.