காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது இவர்தான்! அடித்து சொல்லும் கார்த்தி சிதம்பரம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும்போது, அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைவார்கள் என்று காங்கிரஸ் கட்சி எம்பியான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 17) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தில் இருப்பதால் அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதேபோல காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி என பலரும் தங்களது வாக்கினை செலுத்தினர். இந்நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் தனது வாக்கினை திருவனந்தபுரத்தில் செலுத்தினார்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு நபரான மல்லிகார்ஜூன கார்கே தனது வாக்கினை செலுத்தினார். இவரே கட்சியின் பெருமளவு ஆதரவை பெற்றவர் என்று கூறப்படுகிறது. சசி தரூருக்கு தமிழ்நாட்டின் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளனர்.
ஏசியாநெட் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம், ‘எனக்கு கிடைத்த வரவேற்பு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கணிசமான வாக்குகளைப் பெறுவோம். வாக்கு எண்ணும் நாளான வரும் 19 ஆம் தேதி அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைவார்கள். சசி தரூரின் பிரச்சாரம் சராசரி காங்கிரஸ் கட்சியினர் வரை சென்றுள்ளது. அவர் கணிசமான வாக்குகளைப் பெறுவார். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளது’ என்று கூறினார்.
இதையும் படிங்க..Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!