சுகாதார தூதுவர்களாக மாறிய அரசு பள்ளி மாணவிகள்..! டெங்கு ஒழிப்பில் அசத்தும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!


யாரோ ஒரு சினிமா ஸ்டாரை வைத்து எடுப்பதை விட மக்களில் ஒருவரை விளம்பர தூதுவராக நியமித்து அசத்தியிருக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

First Published Oct 26, 2019, 1:50 PM IST | Last Updated Oct 26, 2019, 1:50 PM IST

நீங்கள் பார்த்த இந்த வீடியோவில் சுகாதாரத்தைப் பற்றி பேசும் இந்த தூதுவர்கள் பெரிய சூப்பர் ஸ்டார்களோ, பிரபலங்களோ கிடையாது. அரசு பள்ளியில் படிக்கும் சாதாரண  மாணவர்கள் தான் சுகாதாரத்தை பற்றியும் அதன் விழிப்புராணவு பற்றியும் தெளிவாக பேசுகிறார்கள்.

யாரோ ஒரு சினிமா ஸ்டாரை வைத்து எடுப்பதை விட மக்களில் ஒருவரை விளம்பர தூதுவராக நியமித்து அசத்தியிருக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

ஏற்கனவே  மழைநீர் சேமிப்பு குறித்து மழைநீர்! உயிர்நீர்! என்ற தத்துவதோடு நமக்காக... நாட்டுக்காக... நாளைக்காக... என்ற முழக்கத்தோடு டெங்கு ஒழிப்பில் மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் களத்தில் குதித்துள்ளார் அமைச்சர் வேலுமணி.

இதை வெறும் விளம்பரமாக மட்டும் பார்க்காமல் நாட்டின் குடிமகன் என்ற முறையில் நம் சுகாதாரத்தை பேணி காப்பதும், நமது இருப்பிட பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வதும் அவசர அவசியமாகும்.