திமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் - செல்லூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நிற்க தயார். எல்லா கட்சிகளும் தனித்து நின்றால் தான் யாருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என தெரியும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

First Published Oct 12, 2022, 1:05 AM IST | Last Updated Oct 12, 2022, 1:05 AM IST

முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவை வழிநடத்தும் வலிமையான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். திமுகவுக்கு தான் பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக்காக உள்ளது. 

இந்தி திணிப்பு விவகாரத்தில் முதலமைச்சரின் செயல்பாட்டை வரவேற்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை தான் இருக்க வேண்டும். இந்தி திணிப்பை அதிமுக எதிர்க்கிறது. மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்க கூடாது.