முதல்வர் ஸ்டாலின் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார் - அமைச்சர் சேகர்பாபு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உண்மையான திராவிட மாடலுக்காக கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார் என்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டின் இறையாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் உண்ணிப்பாக கவனித்து வருகிறார். எங்களைப் பொருத்தவரை திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் தினம் தினம் நிரூபித்து வருகிறோம். நேற்று கூட எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு திருச்செந்தூரில் முதல் முறையாக ரூ.300 கோடியில் திருப்பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார் இது தான் திராவிட மாடல்.
கலகத்தை உண்டாக்குவது, பிரச்சினையை உண்டாக்குவது, இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்துவதல்ல திராவிட மாடல். உண்மையான திராவிட மாடலுக்காக எல்லா வகையிலும் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார். மேலும் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் ஆரம்பத்தில் 48 கோவில்களில் தொடங்கப்பட்டது, ஆனால் தற்போது இத்திட்டம் 300க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.