பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் !! சின்னத்தையே மறந்து போன அமைச்சர் வீடியோ...!
பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் !! சின்னத்தையே மறந்து போன அமைச்சர் வீடியோ...!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில், பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துக்கு ஆதரவாக பொதுக் கூட்டம் நடந்தது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு கேட்பதற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறி செமையாக காமெடி பண்ணினார்.