இடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...!
விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தல் நடந்த வந்த நிலையில் பாமக நிர்வாகி - தேமுதிக நிர்வாகிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்புயை ஏற்ப்படுத்தி உள்ளது
விக்கிரவாண்டியில் கல்யாணம் பூண்டியில் அமைந்துள்ள 96வது பூத்தில் இயல்பாக வாக்குபதிவு நடைபெற்று வந்து அப்போது வாக்குச்சாவடிக்கு சுமார் 100 மீட்டர் அருகாமையில் பாமக நிர்வாகி மணிகண்டன் என்பவருக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்