அமெரிக்காவில் கன்றுக்குட்டியுடன் கொஞ்சி மகிழும் எடப்பாடி.. தட்டிக் கொடுக்கும் தாறுமாறு வீடியோ..!
அமெரிக்கா நாட்டின் பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று தொழில்நுட்பங்கள் பற்றி கேட்டறிந்தார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சேலம் மாவட்டம் வீரகனூரில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆடு மாடுகள் தொடர்பான உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் ஒன்று கூட்டுரோடு அருகில் 800 ஏக்கர் பரப்பளவில், பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆசியாவிலே மிகப்பெரிய கால்நடை பூங்கா 600 ஏக்கர் பரப்பளவில், 396 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என்றும் அறிவித்தார்.
இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு அந்தக் கால்நடை ஆராய்ச்சி நிலையம் தொடர்பாக சர்வதேச மன்றத்திலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து நேற்று அமெரிக்காவின் பஃபல்லோ நகரில் இருக்கும் கால்நடை பண்ணைக்குச் சென்றார் பார்வையிட்டார்.
அப்போது சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்காவில் இந்தத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கேட்டறிந்தார்.
பண்ணையிலுள்ள கால்நடைகளை ஆர்வமாகப் பார்வையிட்ட முதல்வர் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அங்குள்ளவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பசுக்களை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து அவற்றுக் உணவளித்தார்.
இந்த ஆய்வின்போது முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் சம்பத், தகவல் துறை அமைச்சர் உதயகுமார், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பல அதிகாரிகள் இருந்தனர்.