தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில் இமாலய ஊழல் - அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பத்திரப்பதிவுத்துறையில் ஒவ்வொரு பதிவுக்கும் ரூ.5,500 வீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு பத்திரப்பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடைபெற்றுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

First Published Jan 6, 2024, 6:59 PM IST | Last Updated Jan 6, 2024, 6:59 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசு விதித்துள்ள கட்டணத்திற்குக் கூடுதலாக, மேலும் ஒரு தொகை கட்ட, பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 

பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்திக்குச் செல்லும் இந்த ‘Murthy Fees’ தொகையை வசூலிக்க, தமிழகம் முழுவதும் ப்ரோக்கர்களை நியமித்துள்ளார் அமைச்சர் மூர்த்தி. தங்கள் கடின உழைப்பில்  வீடு, நிலம் வாங்க விரும்பும் பொதுமக்கள், ‘Murthy Fees’ கட்டினால்தான் பத்திரப்பதிவே நடக்கும் என்ற நிலையில் இன்று தமிழகம் இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு பதிவுக்கும் ரூ.5,500 வீதம் வசூலிக்கப்படுகிறது என குற்றம் சாட்டி உள்ளார்.