Video: ஆளுநரை அழைத்து வந்து தமிழக அரசு அசிங்கப்படுத்துகிறது - வானதி சீனிவாசன் ஆவேசம்

இந்த ஆண்டுக்கான் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைத்து வந்து தமிழக அரசு வேண்டுமென்றே அசிங்கப்படுத்தி இருப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி உள்ளார்.

First Published Jan 9, 2023, 5:16 PM IST | Last Updated Jan 9, 2023, 5:16 PM IST

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழக அரசு சார்பில் அச்சடித்து கொடுக்கப்பட்ட சில வார்த்தைகளை பயன்படுத்த ஆளுநர் மறுப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் பாதியிலேயே அவையை விட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்;- ஆளுநர் உரையின் போது கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல் செயல்படுகிறது ஆளும் திமுக. நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்டத்தை அரசு பொது வெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது. ஆளுநர் உரையை கூட அவரிடம் பேசி ஒப்புதல் வாங்காததை இந்த நிகழ்வு காட்டுகிறது. ஆளுநரை வைத்து திமுகவின் சித்தாந்தத்தை புகழ்பாட வைக்க நினைக்கிறார்கள். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. உங்கள் சித்தாந்தத்தை ஆளுநர் மீது நீங்கள் திணித்துள்ளீர்கள். அரசு சொல்வதை மட்டுமே பேச வேண்டும் என்ற நிர்பந்தம் ஆளுநருக்கு இல்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

Video Top Stories