பாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்!!அதிர்ச்சியில் பாஜக..
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மிகச் சிறந்த பாராளுமன்றவாதி. தலைசிறந்த பேச்சாளர். மறக்க முடியாத மனிதர். பாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி அவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருகின்றனர். முதலில் பிரமோத் மகாஜன், பிறகு அனந்தகுமார், சுஷ்மா சுவராஜ், இப்போது அருண் ஜெட்லி.