200 பேர் நடிகை ரோஜாவின் காரை வழிமறித்ததால் பரபரப்பு... சொந்த கட்சி ஆதரவாளர்கள் தாக்க முயற்சி..! வீடியோ

200 பேர் நடிகை ரோஜாவின் காரை வழிமறித்ததால் பரபரப்பு... சொந்த கட்சி ஆதரவாளர்கள் தாக்க முயற்சி..! வீடியோ

First Published Jan 6, 2020, 12:51 PM IST | Last Updated Jan 6, 2020, 12:51 PM IST

சித்தூர் மாவட்டம் :

நடிகை ரோஜா ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நகரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் கிராம தலைமை செயலகத்தை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார்.

அப்போது அந்த ஊரை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான மண்டல ஒன்றியக் குழு உறுப்பினர் அம்முலுவின் ஆதரவாளர்களான 200 பேர் ரோஜாவின் காரை வழிமறித்து அவருக்கு எதிராக கோஷமிட்டு தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.