ஆவின் நெய் விலையேற்றம் தவிர்க்க முடியாதது - துரைவைகோ விளக்கம்

ஆவினில் தவிர்க்க முடியாத காரணங்களால் தான் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. காரணங்களால் இருப்பினும் கர்நாடகா அரசு கூட்டுறவில் விற்கப்படும் நெய்யின் விலையும், ஆவின் நெய் விலையும் சமமாக இருப்பதாக துரைவைகோ விளக்கம் அளித்துள்ளார்.
 

First Published Dec 17, 2022, 3:59 PM IST | Last Updated Dec 17, 2022, 3:59 PM IST

மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரைவைகோ சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒன்று. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்ட மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும். தவிர்க்க முடியாத  தான் ஆவினில் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அப்படி உயர்த்தப்பட்டாலும் அது நம் அண்டை மாநிலமான கர்நாடகா கூட்டுறவு மையத்தில் விற்கப்படும் நெய்யின் விலைக்கு சமமாக தான் உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.