"நான் திமுகதான்"உண்மையை போட்டுடைத்து பகீர் கிளப்பிய சீமான்..! பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் பரபரப்பு பேச்சு வீடியோ..!
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பல கருத்துகளை முன் வைத்து பரபரப்புக்காக தனுது பாணியில் பேசினார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று நவம்பர் 26, அதேபோல் போரில் உயிரிழந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளான நவம்பர் 27 மாவீரர் தினம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிப்பது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை போரூர் ஆற்காடு சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண அரங்கில் பிறந்த நாள் திருவிழா கோலகலமாக நடைபெற்றது.
இதில் சிறப்பு பறை இசை,ரத்த தானம், குழந்தைக்கு பெயர் வைத்தல், இலவச கறிவிருந்து, கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்ட திருவிழா போன்று கொண்டப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தைக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி பெயர் மதிவதனி அந்த குழந்தைக்கு சூட்டப்பட்டது மேலும் இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிறப்புரை ஆற்றினார் இதில் பல கருத்துகளை முன் வைத்து பரபரப்புக்காக தனுது பாணியில் பேசினார் இதுபோல் தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவாளர்களால் மட்டும் அல்லாமல் தமிழர்களும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்தநாளை விமர்சையாகக கொண்டாடினர்.