அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமம்.. ரயிலில் வியாபாரம் செய்யும் பார்வையற்றோர் வேதனை..! வீடியோ
அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமம்.. ரயிலில் வியாபாரம் செய்யும் பார்வையற்றோர் வேதனை..! வீடியோ
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் ராமதாஸ் புறத்தில் வசித்து வரும் சுமார் 40கும் மேற்பட்ட ரயிலில் ஊதவத்தி பேனா கீ செயின் கட்சிப் போன்ற வியாபாரம் செய்யும் பார்வையற்றோர் பெரிதும் பதிப்படைந்துள்ளதாக குமுறுகின்றனர்.
ரயிலை நம்பியே அன்றாட வாழ்க்கை நகர்ந்துகொண்டு இருந்த வேலையில் கோரோனா வைரஸ் தொற்று காரணமாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் தங்களது அன்றாட வாழ்க்கை ஓட்டமும் நின்று விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
பால் மளிகை பொருட்கள் வாங்க கூட வழி இல்லாமல் ஏதாவது உதவி கிடைக்குமா என வழிமேல் விழிவைத்து காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.இவர்களை கருத்தில் கொண்டு உதவும் கரங்கள் எனும் தன்னார்வலர்கள் அமைப்பு தினமும் உணவு வழங்கி வருவதாக தெரிவித்தனர்.
எனினும் மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் தேவை படுவதால் அதனை பூர்த்தி செய்யமுடியாமல் தவிப்பதாகா கூறுகின்றனர்.
மேலும் தங்கள் அனைவரும் வாடகை வீட்லேய தங்கி வியாபாரம் செய்து வந்ததாகவும் தற்போதைய சூழ்நிலையால் வாடகை அளிக்க முடியாமல் எப்பொழுது வீட்டை விட்டு வெளியேறும் நிலை என தெரியாமல் இருப்பதாகவும் மற்ற அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கியது போல,அண்டை மாநிலங்களான கேரளா போன்று மாற்று திறனாளிகளான தங்களுக்கும் தமிழக அரசு நிவாரணத்தை அளித்து பார்வையற்ற எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.