மணப்பெண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு; ஐசியூவில் நடந்த திருமணம்!!

தெலுங்கானா மாநிலம் மஞ்சரியாவில் மணப்பெண் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் ஐசியூவில் திருமணம் நடந்தது. 
 

First Published Feb 24, 2023, 5:28 PM IST | Last Updated Feb 24, 2023, 5:28 PM IST

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விவரம் வருமாறு: கடந்த மாதம் பூபாலப்பள்ளி மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஜெயசங்கருக்கும், சென்னூர் மண்டலம் லம்பாடிப்பள்ளியைச் சேர்ந்த ஷைலஜாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை ஷைலஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மணப்பெண்ணின் உடல்நிலை சற்று மோசமாக இருந்ததால், அதே நாளில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணத்தை தள்ளிப்போடாமல், மாப்பிள்ளை யிருபதி மருத்துவமனையில் உள்ள படுக்கையில் திட்டமிட்ட முகூர்த்தத்தில் மணமகளின் கழுத்தில் தாலியைக் கட்டினார். 
 

Video Top Stories