Yudh Abhyas Exercise: யுத் அபியாஸ் 'கில் பாக்ஸ்':தீவிரவாதிகளை ஒழிப்பில் இந்தியா, அமெரிக்க ராணுவம் ஒத்திகை

இந்தியா மற்றும் அமெரிக்க வீரர்கள் இணைந்து யுத் அபியாஸ் என்ற பெயரில் கூட்டு ராணுவப் பயிற்சியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதில் ஒருபகுதியாக தீவிரவாதிகள் வீட்டுக்குள் பதுங்கி இருந்தால், அவர்கள் வீடு புகுந்து தாக்கிஅழிக்கும் கில்பாக்ஸ் பயிற்சியில் இன்று இரு நாட்டு படையினரும் ஈடுபட்டனர்

First Published Dec 3, 2022, 4:28 PM IST | Last Updated Dec 3, 2022, 4:28 PM IST

இந்தியா மற்றும் அமெரிக்க வீரர்கள் இணைந்து யுத் அபியாஸ் என்ற பெயரில் கூட்டு ராணுவப் பயிற்சியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதில் ஒருபகுதியாக தீவிரவாதிகள் வீட்டுக்குள் பதுங்கி இருந்தால், அவர்கள் வீடு புகுந்து தாக்கிஅழிக்கும் கில்பாக்ஸ் பயிற்சியில் இன்று இரு நாட்டு படையினரும் ஈடுபட்டனர்

மாற்றத்துக்கு தயாராகிறதா பாஜக? தேசிய, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மிகப்பெரிய கூட்டம்
இந்த கில்பாக்ஸ் பயிற்சியில், தீவிரவாதிகள் இரு வீடுகளில் பதுங்கியுள்ளனர். அவர்கள் பதுங்கி இருக்கும் வீட்டுக்கு எந்தவிதமான சேதமும் இன்றி அவர்களை கொல்வது குறித்து அமெரிக்க, இந்திய படையினர் பயிற்சி எடுத்தனர்.

இந்த பயிற்சியின்படி, ஒரு வீட்டுக்குள் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்து தகவல் கிடைக்கிறது. இதில் முதல்வீட்டுக்குள் நுழையும் முன், படையினர் ஐஇடி வெடிபொருள் மூலம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, தீவிரவாதிகளை உயிருடன் பிடித்தனர். இந்த பயிற்சியின் போது சேதங்கள் குறைவாக இருக்கும்வகையில் வீரர்கள் பார்த்துக்கொண்டனர்.

50 கி.மீ பேரணி!16 தொகுதிகள்: மெகாபேரணியில் பிரதமர் மோடி பிரச்சாரம்:10 லட்சம் பேர் திரண்டனர்

முதல்வீட்டுக்குள் சென்று வெற்றிகரமாக தீவிரவாதியைப் பிடித்த இரு படையினரும், 2வது வீட்டுக்குள் நுழைந்தனர். பல ரவுண்ட்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப்பின் அங்கிருந்த தீவிரவாதியையும் பிடித்தனர்.

Video Top Stories