தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே பணப்பட்டுவாடாவில் மும்முரம் காட்டும் அரசியல் கட்சிகள்

தேர்தல் அறிவிக்கப்பட்டால் பணப்பட்டுவாடா செய்ய முடியாது என்ற நிலையில், தேர்தல் அறிப்புக்கு முன்னரே அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

First Published Feb 27, 2024, 3:38 PM IST | Last Updated Feb 27, 2024, 3:38 PM IST

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜோகாராவு. ஆந்திராவில் பொதுத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பார்வதிபுரம் தொகுதியில் போட்டியிட ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஜோகாராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் என்று கூறப்படுகிறது.

எனவே தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்துள்ள ஜோகாராவு வாக்காளர்கள் ஆகிய பெண்களை மண்டபம் ஒன்றுக்கு வரவழைத்து அவர்களுக்கு தலா ஒரு விலை உயர்ந்த புடவை, 500 ரூபாய் பணம் ஆகிவற்றை வழங்கி வழி அனுப்பி வைத்தார். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் இது போன்ற செயலில் ஈடுபட்டால் அது கடுமையான குற்றம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.

மேலும் பங்கிடுவதற்காக கொண்டு வரப்பட்ட பணம், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படும். எனவே இந்த பிரச்சினை நமக்கு எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ ஜோஹாராவ், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே வாக்காளர்களுக்கு சம்திங், சம்திங் கொடுத்து அவர்களை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆந்திராவின் பல்வேறு ஊர்களிலும் இதுபோன்ற செயல்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories