சிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..!

ஒரு மரத்தின் அருகே நின்றிருந்த சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்துகொண்டார்.சிங்கத்தை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டே இருக்க, சிங்கமும் அந்த இளைஞரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

First Published Oct 18, 2019, 1:16 PM IST | Last Updated Oct 18, 2019, 1:20 PM IST

டெல்லி வன உயிரியல் பூங்காவில் நேற்று நண்பகல் 12 மணி அளவில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்த போது, பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் காத்திருந்தனர். அப்போது, அனைவரையும் மீறி இளைஞர், சிங்கம் அடைத்து வைக்கப்பட்டுள்ள முள் கம்பி வேலி சூழப்பட்ட இடத்தைத் தாண்டி குதித்தார்.

அங்கிருந்து நடந்து சென்ற அவர், ஒரு மரத்தின் அருகே நின்றிருந்த சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்துகொண்டார்.சிங்கத்தை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டே இருக்க, சிங்கமும் அந்த இளைஞரைப் பார்த்துக் கொண்டிருந்தது.இதைப் பார்த்த பூங்கா காவலர்கள், சிங்கம் பராமரிப்பாளர்கள் அந்த இடத்துக்குள் நுழைய முயன்றனர்.

சிங்கத்தின் அருகே அந்த இளைஞர் செல்லச் செல்ல சிங்கம் ஒதுங்கிச் சென்றது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories