பெண்களை தொட்ட.. நீ கெட்ட..! இரண்டு இளைஞர்கள் அசத்தல் வீடியோ
இரண்டு இளைஞர்கள் ஒரு விதமான டெக்னாலஜியை பயன்படுத்தி பெண்களுக்கு எனவே பிரத்தியேகமான ஸ்மார்ட் வளையல் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள்
பொதுவாக எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் கலாச்சாரம் மாறிவிட்டாலும் இன்றளவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என எதை நோக்கி சென்றாலும் முழுமையான தீர்வை எட்ட முடியாத சூழல் தான் இன்றளவும் இருக்கிறது இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் வித்தியாசமான முயற்சியில் இறங்கி இருக்கிறார் காடி கிரிஷ் மற்றும் சாய் தேஜா என்ற இரு இளைஞர்கள்
தெலிங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த காடி கிரிஷ் மற்றும் சாய் தேஜா என்ற இரண்டு இளைஞர்கள்
ஒரு விதமான டெக்னாலஜியை பயன்படுத்தி பெண்களுக்கு எனவே பிரத்தியேகமான ஸ்மார்ட் வளையல் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள் பெண்கள் இதை அணிந்து கொண்டு வெளியில் செல்வது அவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் எதிர்பாராதவிதமாக யாரேனும் அவர்களைத் தாக்கினால் அல்லது அத்துமீறி தொட்டால் இந்த வளையல் மூலம் தாக்கங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் வகையில் உருவாக்கி உள்ளார் அதேசமயம் பெண் இருக்கும் இடம் குறித்து சிக்னல் மூலம் பெற்றோர் மற்றும் போலிஸார் தெரியப்படுத்திவிடும் என தெரிவித்துள்ளனர். இந்த பிரத்தியேகமான ஸ்மார்ட் வளையல் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்படத்தக்கது