Asianet News TamilAsianet News Tamil

சர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..!


சர்வதேச அளவில் மிகச் சிறந்த யோகா குருவாக திகழ்ந்தவர், ஐயங்கார் யோகா நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் பி.கே.எஸ் ஐயங்காரின் நினைவு நாள் இன்று..

இருபதாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியாவைத் தாண்டி யோகா பிரபலமடைய செய்தவர் பி.கே.எஸ். ஐயங்கார்
 
1918 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பேலூரில் பி.கே.எஸ். ஐயங்கார் பிறந்தவர். 

இவரது தந்தை கிருஷ்ணமாச்சாருக்கு 13 பிள்ளைகள். அதில் 11வது பிள்ளையாக பிறந்தார். இவர் தந்தை இறந்ததும் குடும்பம் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தது.

சிறு வயதிலிருந்தே உடல் மெலிந்து அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்துள்ளர் ஐயங்கார். இதையடுத்து இவரது மைத்துனர் இவரை தனது மைசூர் இல்லத்துக்கு வரவழைத்து யோகா கற்றுக் கொடுத்தார்.

1934 ஆம் ஆண்டு கிருஷ்ணமாச்சார்யா, பி. கே. எஸ். ஐயங்கார் மற்றும் பிற மாணவர்களைக் கொண்டு மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் யோகாவினை நிகழ்த்திக் காட்டினார். இதுவே  பி. கே. எஸ். ஐயங்கார்  வாழ்க்கையில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது

1937ஆம் ஆண்டு  பி. கே. எஸ். ஐயங்கார்க்கு 18 வயது நிரம்பியது யோகா கற்று புனே சென்றார். அவர் யோகாவின் பல்வேறு நுட்பங்களைப் பரிசோதனை செய்ய ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் செலவிட்டார்.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பல்வேறு வயதினரும் அவரை நாடி வந்து யோகா மூலம் ஆரோக்கிய வாழ்வு பெற்றுள்ளனர் 

பி. கே. எஸ். ஐயங்கார் யோகா நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர்.அவர் பதஞ்சலி யோக சூத்திரங்கள், யோகா பயிற்சி, யோகாத்தின் ஒளி, பிராணயாமம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார், 1991 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2014ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார். 

 2004 ஆம் ஆண்டில் டைம் இதழ் வெளியிட்ட உலகில் மிகவும் செல்வாக்கு மிகுந்த 100 பேர்களில் ஒருவராக ஐயங்காரின் பெயர் இடம்பெற்றது.

2001 இல் சீன அரசு அஞ்சல் துறை இவரைக் கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட்டது

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பி.கே.எஸ் ஐயங்கார் 95 வயதியில் மாரடைப்பால் காலமானார்.

சர்வதேச அளவில் மிகச் சிறந்த யோகா குருவாக திகழ்ந்தவர், ஐயங்கார் யோகா நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் பி.கே.எஸ் ஐயங்காரின் நினைவு நாள் இன்று..

Video Top Stories