VK Pandian | ஒடிசா அரசியலில் தமிழன்..யார்‌ இந்த வி.கே பாண்டியன்

ஒடிசாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித் ஷா உள்ளிட்ட பலரும் வி.கே.பாண்டியனை டார்கெட் செய்து வருகின்றனர். பிறப்பால் தமிழராக இருந்தாலும் தன்னை ஒடிசா மண்ணின் மைந்தனாக படிப்படியாக மாற்றிக் கொண்டு வருகிறார். இவர் அங்கு சாதித்தது என்ன? என்பது கவனம் பெறத் தொடங்கியுள்ளது.
 

First Published May 24, 2024, 9:14 AM IST | Last Updated May 24, 2024, 9:14 AM IST

 

ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் 24 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து அம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறார். இந்த சூழலில் மீண்டும் ஒரு தேர்தலுக்கு தயாராகியுள்ளார். சட்டப்பேரவை மற்றும் மக்களவை என இரண்டிற்கும் ஒன்றாக தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் நான்கு கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டு கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சிய கட்டங்களுக்கு வாக்கு சேகரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. பிரச்சார களத்தில் நவீன் பட்நாயக் பெயரைக் காட்டிலும், வி.கே.பாண்டியனின் பெயர் தான் அதிகம் பேசப்படுகிறது.