Asianet News TamilAsianet News Tamil

காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன்... உயிரை பணயம் வைக்கும் வீடியோ

பெரும் வெள்ளத்தில் ஆம்புலன்ஸ்க்கு முன்னே சிறுவன் ஓடோடி பாதையை காட்டிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
 

தென்மேற்குப் பருவமழை காரணமாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில்  கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக, யதுகிரி மற்றும் தேவ துர்கா இடையே உள்ள பாலம் தண்ணீரால் மூழ்கி உள்ளது. இதனால் சாலையை தெரியாமல் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது

 இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஒன்று அந்த பாலத்தைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் பாலத்தின் வழி எது என்று ஓட்டுநர் அடையாளம் காண இயலாமல் தடுமாறிய சூழலில்,
 அங்கயே சிறுவனொருவன் சிறிதும்  பயமின்றி பாலத்தை கடக்க ஆம்புலன்ஸ்க்கு முன்னே சிறுவன் வெள்ளத்தில் ஓடோடி பாதையை காட்டியன்  மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிறுவனின் வழிகாட்டுதலில், வாகனத்தை செலுத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.
 

Video Top Stories