உத்தரகாசி பனிச்சரிவு : தொடரும் மீட்பு பணி! 6 பேர் காயங்களுடன் மீட்பு!
தொடர் பனிப்பொழிவுக்கு இடையே இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் பல ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உத்தரகாசி பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இதுவரை 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 34 பயிற்சியாளர்கள் மற்றும் 7 மலையேறும் பயிற்றுனர்கள் உட்பட மொத்தம் 41 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இங்கு மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 5 SDRF பணியாளர்கள் மற்றும் மூன்று NIM பயிற்சியாளர்கள் டோக்ரானி பாமாக் பனிப்பாறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
திரௌபதியின் தண்டா-2 மலை உச்சியில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நிலவுவதாக உத்தரகாண்ட் எஸ்டிஆர்எஃப் கமாண்டன்ட் மணிகாந்த் மிஸ்ரா தெரிவித்தார். இருந்த போதிலும், இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் NIM மலையேறும் பயிற்சியாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.