நிலச்சரிவில் புதைந்த மனிதனை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்.. குவியும் பாராட்டுக்கள்..! வீடியோ

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மனிதனை மோப்பநாய் உதவியுடன் உயிருடன் மீட்டெடுத்துள்ளனர்.

First Published Aug 1, 2019, 12:11 PM IST | Last Updated Aug 1, 2019, 12:11 PM IST

ராம்பன் மாவட்டத்தில் பன்தியால் பகுதியில், தற்போது   நிலச்சரிவு ஏற்பட்ட சாலையைச் சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது ரிசர்வ் படை மோப்ப நாய் ஒன்று தொடரந்து குரைத்துள்ளது. அதைக் கேட்டு போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பூமிக்குள் புதைந்து, உயிருக்கு போராடி கொண்டு இருந்தார் .

போலீஸார் உடனடியாக அவர் புதித்திருந்த பகுதியை சுற்றிலும் தோண்டி அவரை உயிருடன் மீட்டனர். சரியான நேரத்தில் மோப்பம் பிடித்து அவரை மீட்க உதவிய நாய்க்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. தற்ப்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகுகிறது.