Watch Video : விலை உயர்ந்தை பைக்கை திருடிய இளைஞர்கள்! - CCTV காட்சிகள் வெளியீடு!
புதுச்சேரியில் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பயமின்றி நிதானமாக திருடி சென்ற இரண்டு வாலிபர்களை, சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி குமரகுரு பல்லம் அந்தோனியர் கோயில் வீதியை சேர்ந்தவர் பிரவின் (22), இவர் தனது வீட்டின் கிழே செல்போஃன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இரவு கடையின் வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று மீண்டும் காலை வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக பெரிய கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரவின் கடை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விடியற் காலை நேரத்தில், தலையில் தொப்பி அணிந்து கொண்டு வந்த வாலிபர் ஒருவர் அக்கம் பக்கம் நோட்டமிட்டவாரு பிரவின் இருசக்கர வாகனம் மீது அமர்ந்து தனது கால்களால் இருசக்கர வாகன பூட்டை உடைக்க முயல்கிறார்.
அப்போது மறைந்திருந்த மற்றொரு வாலிபர் வந்து பூட்டை உடைத்து விட்டு செல்கிறார். அதன் பிறகு தொப்பி அணிந்திருந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது, இதனை தொடர்ந்து கேமிராவில் பதிவான வாலிபர்கள் யார் என்பது குறித்து பெரிய கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்களை தேடி வருகின்றனர்.