சுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..! பரபரப்பு வீடியோ..

விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென 26 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விமான ஓடுதளத்துக்குள் நுழைந்துள்ளார். தற்ப்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published Aug 23, 2019, 3:20 PM IST | Last Updated Aug 23, 2019, 3:22 PM IST

மும்பை விமானநிலையத்தில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்காக SpiceJet Aircraft SG634  ஓடுபாதை 27 இல் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென 26 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விமான ஓடுதளத்துக்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் விமானத்தின் டயர்களை தட்டி சோதித்துப் பார்த்துள்ளார். இதனையறிந்த விமானத்தின் பைலட் உடனடியாக என்ஜினை ஆஃப் செய்தார் .இதனை அடுத்து டாக்ஸிவே என் 1 இல் ஓடுபாதையில் ஒரு நபர் இருப்பதை அறிவித்தது இதனால் மும்பை விமானநிலையத்தில் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது.