Asianet News TamilAsianet News Tamil

டெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்..! நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..

ஒபேஷ் என்ற இளைஞர் இன்ரொபிட் வணிக வளாக சாலையில் இருந்து வீட்டிற்கு செல்வதற்கு ஆட்டோ எதுவும் கிடைக்காமல் சிரமப்பட்ட அவர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஜொமேட்டோ மூலம் முட்டை தோசை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அதை டெலிவரி செய்யும் நபருக்கு ஃபோன் செய்த தன்னுடைய வீட்டிற்கு உணவு ஆர்டர் செய்துள்ளதாகவும், அருகிலிருக்கும் தன்னையும் சேர்த்து வீட்டில் இறக்கிவிட முடியுமா எனக் கேட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்யில் வசிக்கும் ஒபேஷ் என்ற இளைஞர் கடந்த மாதம்  ஜூலை 6ஆம் தேதி இரவு 11.50 மணியளவில் இன்ரொபிட் வணிக வளாக சாலையில் இருந்து வீட்டிற்கு செல்ல கிளம்பி உள்ளார . அப்போது அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்கு ஆட்டோ எதுவும் கிடைக்காமல் சிரமப்பட்ட அவர் கால் டாக்ஸிக்கு புக் செய் முடிவு செய்தார் ஆனால் ஒபேஷ் வீட்டிற்கு செல்ல கால் டாக்ஸி 300 ரூபாய் கட்டணம் இருந்து உள்ளது அதிகாமாக இருந்த காரணத்தால் ஒபேஷ்க்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது.

ஒபேஷ் தான் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஜொமேட்டோ மூலம் egg தோசை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அதை டெலிவரி செய்யும் நபருக்கு ஃபோன் செய்த தன்னுடைய வீட்டிற்கு உணவு ஆர்டர் செய்துள்ளதாகவும், அருகிலிருக்கும் தன்னையும் சேர்த்து வீட்டில் இறக்கிவிட முடியுமா எனக் கேட்டுள்ளார்.

இதற்கு டெலிவரி செய்யும் நபரும் சம்மதிக்க மற்றும் 5 ஸ்டார் மட்டும் கொடுங்கள் என்று கூறியுள்ளார்  அவருடனேயே ஒபேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். இதைனை  ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள ஒபேஷ், “இலவச பயணத்திற்கு நன்றி ஜொமேட்டோ” எனத் தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு டிவிட்டரில் ஜொமேட்டோ நிறுவனம் , “நவீன பிரச்சனைக்கு நவீன தீர்வு தேவைப்படுகிறது” என பதிவிட்டுள்ளது தற்ப்போது இந்த செயல் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி அந்த இளைஞர் பாராட்டுகளும் குவிந்த வன்னம் உள்ளன.

Video Top Stories