குழந்தைகளின் கண் முன்னே மருமகளை போட்டு புரட்டி எடுக்கும் 'நீதிபதி குடும்பம்' அதுவும் வரதட்சணைக்காக..!அதிர்ச்சி வீடியோ..
வரதட்சணை கேட்டு குழந்தைகளின் கண் முன் முன்னாள் நீதிபதி குடும்பத்தினருடன் சேர்ந்து மருமகளை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மற்றும் ஹைதராபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ராமமோகன ராவின் மகன் வஸிஸ்தா என்பவருக்கும், சிந்து ஷர்மா என்வருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. சிந்து ஷர்மாவிடம் கணவர் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வரதட்சணை கேட்டு குழந்தைகளின் கண் முன் முன்னாள் நீதிபதி குடும்பத்தினருடன் சேர்ந்து மருமகளை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ ஆதாரத்தின் கீழ், முன்னாள் நீதிபதி ராமமோகன ராவ் உள்ளிட்டவர்களின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.